உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்:

கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் 'தமிழின் வளம் தமிழர் நலம்' என்னும் இலக்கோடு 19.03.2013 அன்று கோவையில் தொடங்கிய தொண்டு நிறுவனம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கங்கள்:

  • 01. இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகளை நிகழ்த்துதல்.
  • 02. தமிழ் வளம் பெருக்கும் நூல்களை வெளியிடுதல்.
  • 03. ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவரைத் தெரிவு செய்து அவர்களுக்கு முறையே ஒரு இலட்சம் பொற்கிழியும், விருதும் வழங்குதல்.

 

எதிர்வரும் நிகழ்வுகள்: