குழந்தைகள் நலம் நூல் வெளியீட்டு விழா

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையும் எண்ணிலடங்கா இலக்கண, இலக்கிய வளச் சிறப்பும் கொண்ட மொழி தமிழ்மொழி. இத்தகைய பெருமை கொண்ட தமிழின் வளத்தையும், அம்மொழியைப் பேசுகின்ற தமிழரின் நலத்தையும் அடிப்படையாகக் கொண்டு தரணியெங்கும் நிகழும் தமிழாய்வுகள், தமிழரின் மொழிப் பங்களிப்புகளை உலகுணரச் செய்யும் வகையில் கோவை மருத்துவ மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பே உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் தகைசால் நிறுவனம்.

இம்மையத்தின் சார்பில் 27.07.2013 அன்று மருத்துவர் க.இராஜேந்திரன் அவர்கள் எழுதிய "குழந்தைகள் நலம்" என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நிகழ்தது.

தமிழ் இலக்கியங்களில் குழந்தை இலக்கியங்கள் எவ்வாறு அருகிப் போய் காணப்படுகிறதோ அது போன்றே, தமிழ்ச் சமூக அமைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்த நூல்களும் அருகிய நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த குறையைப் போக்கும் முயற்சியில் மருத்துவர் க. இராஜேந்திரன் அவர்களால் எழுதப்பட்டதே குழந்தைகள் நலம் என்னும் சிறந்த நூல். இத்தகு சிறந்த நூலை தமிழகக் கடோலாரப் பாதுகாப்பு தலைமை இயக்குநர் முனைவர் சி. சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார். நூல் வெளியீட்டு விழாவில் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்கள் தலைமையுரை வழங்க, நூலின் முதல் படியினை டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி பெற்றுக் கொண்டார். மாசனிக் குழந்தைகள் நல மருத்துவமனை, தன்னம்பிக்கை மாத இதழின் கௌரவ ஆசிரியர் திரு செந்தில் நடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்த, மருத்துவ ஆலோசகர் மருத்துவர் எம்.இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஸ்வரன் நன்றி கூறினார்.